உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., சத்திரப்பட்டியில் முளைக்கொட்டு திருவிழா

ஸ்ரீவி., சத்திரப்பட்டியில் முளைக்கொட்டு திருவிழா

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் நெசவுத் தொழிலை ஆதாரமாக கொண்ட சமூகத்தினரின் ஆடிமுளைக் கொட்டு திருவிழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு வீடுகளில் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரிகளை செல்வமுளை மாரியம்மன், யோக மாரியம்மன், ஜெய மாரியம்மன் உள்ளிட்ட கோயில் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் முளைப்பாரிகளை பெண்கள் தெருக்கள் வழியாக சுற்றி வந்து துரை மடம் அருகே கிணற்றில் கரைத்தனர்.

தங்கச் சப்பரம் ஊர்வலம் நடைபெற்றது. விழாவையடுத்து மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் ஏற்றுமதி தொழிற்சாலைகள் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.

* ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோவில் மேற்கு, கிழக்கு, மாயாண்டி பட்டி, ஊரணிப்பட்டி, மடத்துபட்டி, முதலியார்பட்டி சாலியர் சமுதாயத்தின் சார்பில் முளைப்பாரி திருவிழா ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை 5:00 மணி முதல் அந்தந்த தெருவில் இருந்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரிகள் எடுத்து பெரிய மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர்.

பின்பு அங்கிருந்து பட்டத்தரசி அம்மன் கோயில் சென்றடைந்தனர். அங்கு அம்மனை தரிசித்த பிறகு முளைப்பாரிகளை நீர் நிலைகளில் கரைத்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !