உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குயவன்குடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா விழா

குயவன்குடி சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் நேற்று குரு பூர்ணிமா விழா நடந்தது. காலையில் ஆரத்தி, கணபதி ஹோமம், தன்வந்திரி, சுதர்சன, நவக்கிரக ஹோமம் நடந்தது. சாய்பாபாவுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. முதல் முறையாக ஸ்ரீ சத்யநாராயண குருபூஜையும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்ஸவர் சாய்பாபா அலங்காரத்தில் துவாரகாமாயி மண்டபத்தை அடைந்தார். அங்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இரவு ஆரத்தியுடன் விழா நிறைபெற்றது. இனி வரும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஸ்ரீ சத்யநாராயண குருபூஜை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !