உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று திருவோண விரதம்; பெருமாளை வழிபட தீராத நோய் தீரும் மற்றும் ஆயுள் கூடும்!

இன்று திருவோண விரதம்; பெருமாளை வழிபட தீராத நோய் தீரும் மற்றும் ஆயுள் கூடும்!

திருவோண விரதம் என்பது பெருமாளுக்கு மிகவும் உகந்த, சக்தி வாய்ந்த விரதங்களில் ஒன்றாகும். மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெருமாளின் வாமன அவதாரம் இந்த திருவோண நட்சத்திரத்தில் தான் நிகழ்ந்தது. திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட சந்திர தோஷம் நீங்கும். பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நிம்மதியான வாழ்வு அமையும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை ஸேவித்து வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியாக வாழலாம் என்பது நம்பிக்கை. 

இந்நாளில் விரதமிருந்தால் வீட்டில் செல்வ வளமும், மன அமைதி, லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !