உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கேணி மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம்

செங்கேணி மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம்

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு செங்கேணி மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு 501 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது.

திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் செங்கேணி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, 18ம் ஆண்டு 501 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 6:00 மணிக்கு நவதுர்கா ஹோமம் நடந்தது. சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகத்துடன், 501 பால்குடம் மாட வீதி வழியாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 9:00 மணிக்கு செங்கேணி மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், கும்பம் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர்,செங்கேணியம்மன் கோவில் பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !