உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி பூவாத்தம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா

செஞ்சி பூவாத்தம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா

செஞ்சி: செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவில் 36ம் ஆண்டு ஆடி பவுர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு 29ம் தேதி காலை 8.00 மணிக்கு கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர். 11 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து மணிக்கு 108 பால் குடம் ஊர்வலமாக எடுத்து சென்று செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு ஆரதனை செய்தனர் இரவு சக்தி கரகமும், மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லியம்மன் முத்து பல்லக்கில் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !