உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில் குரு பூர்ணிமா; ஆசிரியர்களுக்குக் கௌரவம்

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில் குரு பூர்ணிமா; ஆசிரியர்களுக்குக் கௌரவம்

பாலக்காடு: பாலக்காடு சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில் குரு பூர்ணிமா விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு கணபதி ஹோமம் மற்றும் சதுர்வேத பாராயணத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் குரு வந்தனம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை சிருங்கேரி மடத்தின் நிர்வாக குழு தலைவர் கரிம்புழா ராமன் தலைமையில் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு எப்போதும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும், மாணவர்களின் உயர்வுக்கு ஊக்கமளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொடர்ந்து, 108 பெண்கள் பங்கேற்ற லலிதா சகஸ்ரநாம பாராயணமும், பங்கேற்பாளர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் புடவைகள் வழங்கப்பட்டு சிறப்படைப்பும் நடைபெற்றது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !