உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை திரு விளக்கு பூஜை நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு துர்கை அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முன்பு 108 பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு 8.00மணிக்கு மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர்கள் பச்சையப்பன், சுரேஷ், மதியழகன், ஏழுமலை, சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ் மற்றும் கோவில் ஊழியர்கள்  ய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !