அக்கராயபாளையத்தில் தேர் திருவிழா
ADDED :3 hours ago
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 21 ம் தேதி காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது.
தொடர்ந்து இரவில் அம்மன் வீதி உலா, பால்குடம் எடுத்தல், ஊரணி பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு அங்கப்பிரதட்சணம், அலகு குத்தி பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.