சேத்தியாத்தோப்பு முத்துமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்
சேத்தியாத்தோப்பு: முத்துமாரியம்மன்கோவில் தீமிதி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த விழுப்பெருந்துறை கிராமத்தில் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன்கோவிலில் கடந்த, ஜூலை, 22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் ஆடி மாத தீமிதி உற்சவம் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் தீபாராதனையுடன், பாரதம் படித்தல், கழு மரம் ஏறுதல், அக்னி சட்டி பால்குடம் எடுத்தல் உற்சவம் நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு ஊரின் வடக்கு எல்லையில் சக்திகரம், பால்குடம் கரகம், பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு தீக்குழியில் இறங்கி தீமித்து வழிபாடு செய்தனர். விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர், சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.