உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுப்பர்பாளையம் கன்னிமார் கருப்பராயன் கோவிலில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம் கன்னிமார் கருப்பராயன் கோவிலில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அனுப்பர்பாளையம் தண்ணீர் பந்தல் காலனியில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர், பாலவிநாயகர், கன்னி மூல மஹா கணபதி, அம்ச விநாயகர், வீர விநாயகர், பாலமுருகன், கன்னிமார், கருப்பராயன் சுவாமி, ஆதிபராசக்தி, ஆகிய திருக்கோவில் பொங்கல் விழா கடந்த 28 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இன்று 5ம் தேதி காலை 6:00 மணிக்கு கன்னிமார், கருப்பராயன், சுவாமிகளுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு சாமியை வழிபட்டனர். தொடர்ந்து மதியம் உச்ச பூஜை, மஹா தீபாராதனை, நடைபெற்றது. சுவாமிகள்‌ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நாளை 6 ம் தேதி காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம், மறு பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. மதியம் 12:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !