ஆடி வெள்ளிக்கிழமை; சூலூர் அம்மன் கோவில்களில் பூஜை
சூலூர்: ஆடி வெளியை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆடி மாத நான்காவது வெள்ளிக் கிழமையை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள, பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவில், அப்பநாயக் கன்பட்டி சக்தி மாரியம்மன், ராமாச்சியம்பாளையம், செங்கத்துறை, பாப்பம்பட்டி மாகாளியம்மன், ரங்கநாத புரம் தங்கமுத்து மாரியம்மன், சூலூர் மேற்கு அங்காளம்மன், சூலூர் குடலுருவி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். கலங்கலில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி, ஆதிலட்சுமி, துர்க்கை அம்மனுக்கு, குரும்ப சமுதாய குலதெய்வம் மகாலட்சுமி அம்மன் நல அறக்கட்டளை சார்பாக அபிஷேக , அலங்கார பூஜைகள் இன்று நடந்தன. அறங்காவலர் முத்துசாமி, தலைவர்கள் ரங்கநாதன், சண்முகம், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.