உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி விஸ்வரூப மகா பிரத்தியங்கரா காளிக்கு குடம் குடமாய் பால் அபிஷேகம்

மொரட்டாண்டி விஸ்வரூப மகா பிரத்தியங்கரா காளிக்கு குடம் குடமாய் பால் அபிஷேகம்

மொரட்டாண்டி; உலகிலேயே மிக உயரமான  72 அடி உயர கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளிக்கு ஆடி மாத நான்காம் வெள்ளியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.


உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 72 அடி உயர கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளி, மற்றும் 16 அடி உயர ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்கள் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நான்காம் வெள்ளி அன்று அனைவரும் ஒன்று கூடி பால் குடங்களை சுமந்து மகா பிரத்தியங்கிரா காளிக்கு பாலபிஷேகம் செய்தால் நினைத்தது கை கூடும் வேண்டுதலும் நிறைவேறும் அருளை வாரி வழங்கி இயற்கை சீற்றங்கள் தொலைந்து உலகம் சுபிட்சமாக விளங்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் பால்குட ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இன்று  ஸ்ரீ பிரளய விநாயகர் பாதாள ஸ்ரீ பிரித்தியங்கிரா பரமேஸ்வரி ஆசிரமம் டிரஸ்ட் சார்பில் 26 ஆம் ஆண்டு ஆடி மாத 1008 பால்குட அபிஷேகம் மற்றும் செடல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இந்த பால்குட ஊர்வலத்தில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 1008 பெண்கள் நீல நிற புடவைகள் அணிந்து, கோவிலின் நுழைவு வாயில் முன்பிருந்து புறப்பட்டு பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். பால் கூட ஊர்வலமானது கோவிலை சென்றவுடன் அங்கு ஸ்ரீ மகா பிரத்தியங்கரா காளிக்கு 1008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !