திருப்பூர் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3 hours ago
திருப்பூர், திருப்பூர் மாவட்ட கோவில்களில் ஆடி மாத நான்காவது வெள்ளிக் கிழமையை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி மாத நான்காவது வெள்ளிக் கிழமையை ஒட்டி, திருப்பூர், மங்கலம் ரோடு பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில், அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.