ஆறுமுக பெருமான் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்
ADDED :1 days ago
திண்டிவனம்: திண்டிவனம், ஆறுமுக பெருமான் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்பகநாயக ஈஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமானுக்கு 60 ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா இன்று நடந்தது. அதனையொட்டி, பால் காவடி, செடல், பூந்தேர் மற்றும் வேல் பூஜை நடந்தது. தொடர்ந்து 32 பக்தர்கள் மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டனர். பின், பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.