உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சிறுபாக்கம் எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

அச்சிறுபாக்கம் எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

அச்சிறுபாக்கம்: பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, இன்று விமரிசையாக நடந்தது.


அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு தோறும், ஆடி மாதம் 4வது வார வெள்ளிக்கிழமையில் தீமிதி திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அந்த வகையில், இன்று காலை 7:00 மணியளவில் குளக்கரையில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்துடன், அம்மன் அழைத்து வரப்பட்டார். பின், 10 மணிக்கு மேல் தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. இதில், காப்பு அணிந்து, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், மழுவடி சேவையும், அம்மனுக்கு மஹா அபிஷேக ஆராதனையும் நடந்தது. மாலை, மங்கல இசையுடன் ஊஞ்சல் சேவை நடந்தது. விழா ஏற்பாட்டினை, அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !