தினமும் ஒரு அம்மன்; தீர... விஷ பயம் தீர.. எல்லைப்பிடாரி அம்மனை தரிசிப்போம்.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம். அம்மன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்களுக்காக தினமும் ஒரு அம்மன் இங்கு இடம் பெற்றுள்ளாள். அவளை பற்றி தெரிந்து கொள்வோமா...
விஷ பயம் தீர... விஷ பயம் தீர... சேலம் குமாரசாமிப் பட்டி எல்லைப்பிடாரி அம்மனை தரிசிப்போம்.
முன்பு இப்பகுதியில் உள்ள ஏரியைச் சுற்றி காடு இருந்தது. ஒருமுறை அயோத்தியா பட்டணம் ராமர் கோயில் திருவிழாவுக்கு சென்ற பக்தர்கள் இரவில் இந்த வழியாக வந்தனர். அப்போது பாம்பு ஒன்று பக்தர்களை துரத்தியது. அனைவரும் ஓட்டம் பிடித்தனர். கூட்டத்தில் இருந்த அர்த்தநாரி என்பவர் பாறை தடுக்கி விழுந்தார். எழுந்த போது அங்கு பாறையும் இல்லை. பாம்பும் இல்லை. மண்ணில் பாதி புதைந்திருந்த சிலையை பார்த்தார். ஏரிக்கரையிலேயே அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். கேட்ட வரம் தரும் இவளுக்கு எல்லைப் பிடாரி அம்மன் எனப் பெயர் வந்தது. சேர மன்னர்கள் இக்கோயிலைக் கட்டினர். இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் பலரும் திருப்பணி செய்துள்ளனர். பங்குனியில் நடக்கும் குண்டம் திருவிழா விசேஷமானது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் அலகு குத்தியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
எப்படி செல்வது: சேலத்தில் இருந்து 6 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00, மாலை 4:00 8:00