தினமும் ஒரு அம்மன்; லாபம் பெருக ஊட்டி சந்தைக்கடை மாரியம்மனை தரிசிப்போம்!
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம். அம்மன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்களுக்காக தினமும் ஒரு அம்மன் இங்கு இடம் பெற்றுள்ளாள். அவளை பற்றி தெரிந்து கொள்வோமா...
லாபம் பெருக...
முன்புசந்தையாக இருந்த இப்பகுதியில் இரண்டு பெண்கள் ஒரு கடைக்காரரிடம் தங்குவதற்கு இடம் கேட்டனர். ‘பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கிறார்களே என நினைத்த அவர் அருகில் இருந்த வேப்பமரத்தில் தங்கும்படி சொன்னார். மரத்தின் அருகே அருகே சென்றதும் அவர்கள் ஒளியாக மாறி மறைந்தனர். வந்த இருவரும் அம்மன் தான் என்பதை உணர்ந்த மக்கள் கோயில் கட்டினர்.
ஒரே கருவறைக்குள் காளியம்மனை பிரதிஷ்டை செய்தனர். எல்லா கோயில்களிலும் உக்கிரமாகத் தான் அம்மனை பார்த்திருப்போம். இங்கு அப்படி இல்லை. சாந்தமாக இருக்கிறாள். மாரியம்மன், வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு நெய் விளக்கேற்றினால் தொழிலில் லாபம் பெருகும். ஆடி வெள்ளி, புரட்டாசி நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது அவரவர் வழக்கப்படி அம்மனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.
எப்படி செல்வது: ஊட்டி நகரின் மையப்பகுதியில் கோயில் உள்ளது.
நேரம்: : காலை 6:00 - 11:00 மணி மாலை 5:00 - 8:00
தொடர்புக்கு: 0423 244 2754