உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் பாலமுருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

முத்துமாரியம்மன் கோவிலில் பாலமுருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கோவை;  ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகனை தரிசனம் செய்தனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !