கரியமல்லம்மாள் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :2 days ago
கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம்,கோமாதா பூஜை, பூரணாஹுதி தீபாரதணை நடந்தது. கரியமல்லம்மாள் உருவம் பொறித்த கொடியை கிராமமக்கள் முக்கிய விதியில் ஊர்வலமாக எடுத்து கோயிலுக்கு வந்தனர்.மூலவரான கரியமல்லம்மாள் பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது.பின்பு கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது.அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது.கமுதி சுற்றியுள்ள பலரும் கலந்து கொண்டனர்.ஆக.13ல் விளக்கு பூஜை, ஆக.14ல் பொங்கல் வைத்தால், ஆக.15ல் அக்கினிசட்டி,பால்குடம்,சேத்தாண்டி வேடம், முளைப்பாரி கரைத்தல் நடைபெறும்.ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி மக்கள் செய்தனர்.