உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

செங்கழுநீர் அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த மூங்கில் பட்டு செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா நடந்தது. இன்று ஆடி பூரம் மற்றும் ஐந்தாவது வெள்ளியை முன்னிட்டுசெங்கழுநீர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் ஏற்றி கிராம முக்கிய வீதிகளில் வலம் வந்தது. கிராம பொது மக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மூங்கில் பட்டு மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !