உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மனுக்கு வளை காப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மனுக்கு வளை காப்பு

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில்,  கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வளை காப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு வளை காப்பு நிகழ்ச்சி நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் விழா ஆக 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை முதல் பங்குனி வரை, 12 மாதங்களும் உற்சவங்கள் நடக்கும். அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னாதி முன்பாக  உள்ள தங்க கொடிமரத்தில் மூன்று முறை கொடியேற்றமும் அம்மன் சன்னதியில் ஒருமுறை ஆடிபுரத்தின் போது கொடியேற்றம் நடைபெற்று 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆடிப்பூரம் விழாவில்தினமும் காலை, மாலை பராசக்தி அம்மன், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் விழா நிறைவு நாளான இன்று (ஆகஸ்ட் 14-ம் தேதி) கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியில் பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மாலை கோவில் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்த குளக்கரை அருகில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு வளை காப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் வீதி உலா, இரவு, சுமார் 12:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன், தீமிதி விழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !