/
கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி வெள்ளி; கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஆடி கடைசி வெள்ளி; கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED :4 hours ago
காரைக்குடி: காரைக்குடி பகுதியில் உள்ள கோயில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதத்தை தொடர்ந்து ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி என்று கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்மனுக்கு பக்தர்கள் தீ மிதித்தும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி வெள்ளி கடைசி நாளான இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து சாமி தரிசனம் செய்தனர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், மருதுபாண்டியர் நகர் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் கோமாதா பூஜை நடந்தது. கோயில் வாசல்களில் பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.