உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு அம்மன்: கவலை தீர கடைக்கண் பாரம்மா

தினமும் ஒரு அம்மன்: கவலை தீர கடைக்கண் பாரம்மா

கவலை தீர நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மனை தரிசிப்போம்.

கருணை செய்வதில் கடல் போன்றவள் என்பதால் அம்மனின் கண்கள் நீலநிறமாக உள்ளன. இதனால் ‘நீலாயதாட்சி’, ‘கருந்தடங்கண்ணி’  என அழைக்கப்படுகிறாள்.

இவளுக்கு தனி சன்னதி, கொடிமரம் உண்டு. கன்னி தெய்வமான இவளை வெள்ளிக்கிழமை அன்று தரிசிப்பவருக்கு கவலை, பயம் வராது.

அம்மனுக்கு காவலாக நிற்கும்படி நந்திக்கு கட்டளையிட்டார் சிவன். ‘நான் எப்போதும் உங்களையே பார்க்க வேண்டும்’ எனச் சொல்லிய நந்தி தன் கழுத்தை திருப்பி, அம்மன் சன்னதியில் இருந்து சிவன் சன்னதியை பார்க்கிறார். இடது கண்ணால் சிவனையும், வலது கண்ணால் அம்மனையும் பார்ப்பதால் இவருக்கு ‘இரட்டை பார்வை நந்தி’ என பெயர் வந்தது.

கண் நோய் தீர இவரிடம் வேண்டுகின்றனர். ஆடிப்பூர விழாவில் நீலாயதாட்சி அம்மன் கண்ணாடி தேரில் பவனி வருகிறாள். தல விருட்சமான மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவை கொண்டது.

எப்படி செல்வது: நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:30 –  9:00 மணி
தொடர்புக்கு: 04365 – 242 844


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !