நத்தம் வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் கருட, நாக பஞ்சமி பூஜை
நத்தம்; நத்தம் அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மனுக்கு பால்,தயிர்,தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பலவண்ண மலர்களாலும், மஞ்சள் மாலை அணிந்தும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், நாக சாந்தி ஹோமம்,சர்ப்ப தோஷ நிவர்த்தி ஹோமம்,அஷ்டநாக பூஜை, கருட ஹோமம்,விஷ்ணு ஹோமம்,சுதர்சன ஹோமம்,நரசிம்ம ஹோமம் உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. பெண்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். யாக பூஜைகளை சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.