பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் கருட பஞ்சமி விழா
ADDED :5 hours ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் கருட பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வளர்பிறை பஞ்சமி திதி கருட பஞ்சமியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று, பொள்ளாச்சி அருகே செடிமுத்துார் – நெடும்பாறை ரோட்டில், கருடாழ்வார் கோவிலில், வளர்பிறை பஞ்சமி திதியில், கருட பஞ்சமி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு யாகங்கள், அபிேஷகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். * ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் அருள்பாலித்தார்.