வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி மூல உற்சவ தீர்த்தவாரி
ADDED :1 days ago
புதுச்சேரி: காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில், சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுதந்த ஆவணி மூல உற்சவ தீர்த்தவாரி நேற்று நடந்தது.
புதுச்சேரி, காந்தி வீதியில் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 74ம் ஆண்டு சொக்கநாதர் பிட்டுக்கு மண்சுமந்த ஆவணி மூல உற்சவம் நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 7 மணிக்கு வேதபுரீஸ்வரர், அம்பாள் மற்றும் சொக்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 10:30 மணிக்கு சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமக்கும் சிறப்பு அலங்காரத்தில் குளத்திற்கு புறப்பாடு, 11:00 மணிக்கு கோவில் குளத்தில்ஆவணி மூல தீர்த்தவாரி உற்சவமும், சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.