அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
காரமடை: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஆவணி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின், கால சந்தி பூஜை முடிந்து, புண்ணியாக வாசனம், கலச ஆவாகனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் உற்சவ மூர்த்திகளுக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து அரங்கநாதர் சுவாமி, பட்டு உடுத்தி வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, மேள தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, ஆஸ்தானம் சேர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள், வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் கோவில் செயல் அலுவலர் உட்பட ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர்.