ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் 17ம் தேதி மஹா கும்பாபிஷேகம்
திருப்பூர்: பல்லடம் அருகே கரைப்புதுாரில் உள்ள மாகாளியம்மன், காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 17ம் தேதி கோலாகலமாக நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், கரைப்புதுாரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் மற்றும் ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக பெருவிழா கடந்த மாதம், 23ம் தேதி துவங்கியது. முகூர்த்தக்கால் நடுதல், கடந்த 7ம் தேதி, முளைப்பாலிகை விதைத்தல், 15ம் தேதி விநாயகர் வழிபாடு, கோபூஜையும், முளைப்பாலிகை எடுத்து வருதல், முதற்கால யாக பூஜையும் நடந்தது.
கும்பாபிேஷக விழாவில், நாளை இரண்டாம் கால யாகம், விநாயகர் வழிபாடு, 17ல் கும்பாபிஷேக பெருவிழா, அன்னதானம் நடக்கிறது. வரும், 18ம் தேதி இருந்து மண்டல பூஜை துவங்குகிறது. இதற்கான பணிகளை கோவில் திருப்பணி, விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.