நாகை அக்னி முனீஸ்வரன் கோயில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
நாகை; நாகை அடுத்த நாகூர் வெற்றிலைக்காரன் திருவாசல் தெருவில் அமைந்திருக்கும் அக்னி முனீஸ்வரன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூர் வெற்றிலைக்காரன் திருவாசல் தெருவில் அக்னி முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. நாகூர் நகரத்தின் எல்லை சாமி என்று அழைக்கப்படும் அக்னி முனீஸ்வரன் கோயிலில் குமாபிஷேகம் விழாவிற்கான புதிய ஆலய கட்டுமான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி செவ்வாய் கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடைபெற்றதை அடுத்து, காலை 9 மணிக்கு பூர்ணாஹதி நடைபெற்றது. பின்னர் கடம் புறம்பாடு நடைபெற்றதை தொடர்ந்து அருள்மிகு ஶ்ரீ அக்னி முனீஸ்வரர் , அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சிக்க நடைபெற்றது. ஆலய கலசங்களில் புனித நீர் ஊற்றியதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முனீஸ்வரர் மற்றும் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு தீபாதரணையில் பங்கேற்றனர். பின்னர் ஆலயத்தில் வந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய கமிட்டியினர் கஜேந்திரன், தமிழரசன், மகாதேவன் உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.