உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டூர் முத்தாலம்மன், உசாமரத்து கருப்புசாமி கோவில்களில் கும்பாபிஷேகம்

குட்டூர் முத்தாலம்மன், உசாமரத்து கருப்புசாமி கோவில்களில் கும்பாபிஷேகம்

நத்தம்; நத்தம் அருகே புதுப்பட்டி- குட்டூர் முத்தாலம்மன், உசாமரத்து கருப்புசாமி, ஆகாசவீரன், வேட்டைக்காரன், கரந்தமலையான் கோவில்களில்‌ கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமம்,தனபூஜை, மஹா லெட்சுமி ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், காவேரி,கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !