UPDATED : செப் 17, 2025 08:44 AM
ADDED : செப் 17, 2025 08:39 AM

'டி.வி.எஸ்.,' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 200 4வி' மற்றும் '160 4வி' பைக்குகளை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.
டிசைனில் எந்த மாற்றமும் இல்லை, வெளிப்புற தோற்றம் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக 'பல்சர்' பைக்குகளில் வருவதை போன்ற 'எல்.இ.டி., பிரோஜக்டர்' ஹெட்லைட்கள், புதிய டி.ஆர்.எல்., மற்றும் இண்டிகேட்டர்கள், 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, புளூடூத் இணைப்பு வசதிகள், டிராக் ஷன் கன்ட்ரோல், சிலிப்பர் கிளட்ச் ஆகியவை வந்துள்ளன. 'ஆர்.டி.ஆர்., 200 4வி' பைக்கில் மட்டும், புதிய ஹேண்டில் பார் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
இரு பைக்குகளின் இன்ஜினும், ஒ.பி.டி., 2பி விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. 'ஆர்.டி.ஆர்., 160 4வி' பைக் மூன்று நிறங்களிலும், 'ஆர்.டி.ஆர்., 200 4வி' பைக் இரு நிறங்களிலும் கிடைக்கின்றன.
'அப்பாச்சி' பைக் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், அப்பாச்சி அணி வகுப்பில் உள்ள எட்டு பைக்குகளும், 'ஏனிவர்சரி' எடிஷனில் அறிமுகமாகி உள்ளன.