வோல்வோ 'இ.எக்ஸ்., - 30' மொத்த கன்ட்ரோலும் ஒரு டிஸ்ப்ளேவில்
வோல்வோ 'இ.எக்ஸ்., - 30' மொத்த கன்ட்ரோலும் ஒரு டிஸ்ப்ளேவில்
UPDATED : செப் 17, 2025 08:44 AM
ADDED : செப் 17, 2025 08:42 AM

'வோல்வோ' நிறுவனம், 'இ.எக்ஸ்., - 30' என்ற காம்பேக்ட் மின்சார எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரில், 69 கி.வாட்.ஹார்., 'என்.எம்.சி.,' லித்தியம் அயான் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 480 கி.மீ., வரை ரேஞ்ச் வழங்குகிறது. 'ரியர் வீல் டிரைவ்' அமைப்பில் வரும் இந்த கார், 100 கி.மீ., வேகத்தை வெறும் 5.3 வினாடியில் எட்டுகிறது. பாஸ்ட் சார்ஜர் வாயிலாக இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்ய, 25 நிமிடமும், ஏ.சி., சார்ஜர் வாயிலாக 10 மணி நேரமும் எடுக்கிறது.
![]() |
'வோல்வோ' அடையாளத்துடன் முன்புற 'குளோஸ்ட்' கிரில், 19, 20 அங்குல ஏரோ ஆலாய் சக்கரங்கள், மெல்லிசான எல்.இ.டி., டி.ஆர்.எல்., லைட்டுகள், 'பிளஷ்' டோர் ஹேண்டல், 360 டிகிரி கேமரா, 9 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 12.3 அங்குல சிங்கிள் டிஸ்ப்ளே, பெரிய கிளாஸ் ரூப், ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆப்பிள் கார்பிளே, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், காற்று சுத்திகரிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
டிரைவர் டிஸ்ப்ளே, வெண்ட்டிலேட்டட் சீட், டிரைவ் மோடுகள், ஒயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆகிய அம்சங்கள் இதில் இல்லை. அனைத்து அம்சங்களையும் ஒரே டிஸ்ப்ளேவில் மட்டுமே பயன்படுத்த முடியும். பாதுகாப்புக்கு, அடாஸ் வசதி, 7 காற்று பைகள், டிரைவர் மானிட்டரிங் அமைப்பு உள்ளிட்டவை கிடைக்கின்றன.