/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
நிலத்தை உணர்வுபூர்வமாக தயார் செய்வதே வீடு கட்டும் பயணத்தில் முக்கிய முதல் படி
/
நிலத்தை உணர்வுபூர்வமாக தயார் செய்வதே வீடு கட்டும் பயணத்தில் முக்கிய முதல் படி
நிலத்தை உணர்வுபூர்வமாக தயார் செய்வதே வீடு கட்டும் பயணத்தில் முக்கிய முதல் படி
நிலத்தை உணர்வுபூர்வமாக தயார் செய்வதே வீடு கட்டும் பயணத்தில் முக்கிய முதல் படி
ADDED : ஜூலை 04, 2025 10:23 PM

த ன்னுடைய குடும்பத்திற்காக, ஒரு குடிசையிலிருந்து வீடாக உயர நினைக்கும், எந்த ஒரு மனிதனின் கனவையும், நனவாக்கும் ஆரம்பப்புள்ளிதான் 'நிலம்'.
நிலத்திற்குள்ளேதான் ஒரு குடும்பத்தின் வாழ்வுக்கான, முன்னுரிமைகள் பதிந்திருக்கும் என்கிறார், கோவை மண்டல சிவில் இன்ஜினியர்கள் சங்க செயலாளர் செந்தில்நாதன்.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
தளம் என்பது வெறும் ஒரு நிலம் மட்டுமல்ல. அது இல்ல உரிமையாளர்களின் கனவு. அதை சுத்தம் செய்தல், சமமாக்குதல், அளவீடு செய்வது மற்றும் தற்காலிக வசதிகள் அமைத்தல் என்பது பிரதானமானது.
முதற்கட்டமாக தளம் அகற்றும் பணிகளில் மரம், வேர்கள், பாறைகள், பழைய கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் என அனைத்தும் துார்வாரப்பட வேண்டும். அடித்தள வேலைகள் தடையின்றி நடைபெற இது முக்கியம். மண் சோதனையை துல்லியமாக செய்ய இது உதவுகிறது.
மரவேர்கள், பாறைகள் எதிர்காலத்தில் அடித்தளத்தை பாதிக்காமல் தடுக்க முடியும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உருவாகும். நகராட்சி அனுமதி பெற இது கட்டாயமாகும். தளத்தின் சாய்வு, உங்கள் திட்டத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில், சிறிய 'டிரெயின் ஸ்லோப்' அமைப்பது அவசியம். தரையில் அதிக உயரம் அல்லது தாழ்வுகள் இருந்தால், 'கட்டிங்' மற்றும் 'பில்லிங்' செய்கிறோம். எனவே, தரையும் சமமாகவே இருக்க வேண்டும்.
தண்ணீர் தொட்டி, குடிநீர் இணைப்பு, வரவேற்பு அலுவலகம், தொழிலாளர்களுக்கான தங்கும் வசதி அவசியம். அளவீடு மற்றும் குறியீடுகள் மிகவும் அவசியம். வீடு மண்ணில் உருவெடுக்கும் முதல் கட்டமாக திட்டத்தை நிலத்தில் துல்லியமாகக் குறியிட வேண்டிய தருணம் இது.
நில அளவீடு வரைபடத்துக்கு ஏற்ப, சரியாக இருக்க வேண்டும். தளம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, தரை நிலை சரியாக உள்ளதா மற்றும் தண்ணீர், மின்சாரம், தங்குமிடம் என, தற்காலிக வசதிகள் ஏற்பாடாக உள்ளதா, வரைபடத்தின்படி எல்லை குறியீடு, வேலி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா என்பது முக்கியமானது.
ஒரு கனவின் பயணம், தளத்தை சுத்தம் செய்வதிலிருந்தே துவங்குகிறது. அந்த நிலத்தை நுண்ணுணர்வுடன் தயார் செய்தால், கனவு இல்லங்கள் காலங்களை கடந்தும் உறுதியாக நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.