/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மேல்தளத்தில் ஒயரிங் ஜங் ஷன் பாக்ஸ்களில் கான்கிரீட் புகாமல் இருக்க…
/
மேல்தளத்தில் ஒயரிங் ஜங் ஷன் பாக்ஸ்களில் கான்கிரீட் புகாமல் இருக்க…
மேல்தளத்தில் ஒயரிங் ஜங் ஷன் பாக்ஸ்களில் கான்கிரீட் புகாமல் இருக்க…
மேல்தளத்தில் ஒயரிங் ஜங் ஷன் பாக்ஸ்களில் கான்கிரீட் புகாமல் இருக்க…
ADDED : ஜூலை 04, 2025 11:53 PM

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு, தகுந்த நபர்களை ஏற்பாடு செய்து பணிகளை துவக்கும் போது ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக செயல்பட வேண்டும். இதில் பெரும்பாலான மக்கள் கட்டடத்தின் சுமையை தாங்கும் பிரதான பாகங்கள் விஷயத்தில் தான் அதிக கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது.
கட்டடத்தின் பிரதான சுமை தாங்கும் பாகங்கள் மட்டுமல்லாது, தண்ணீர் விநியோக குழாய்கள், கழிவு நீர் வடிகால், மின்சார இணைப்புக்கான ஒயரிங் வலைப்பின்னல் ஆகிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக கட்டுமான பணிகள் முடியும் நிலையில் தான் ஒயரிங் பணிக்கான ஆட்களை தேடுகின்றனர்.
ஆனால், கட்டடத்தில் மேல்தளத்துக்கான கம்பி கட்டும் வேலை நடக்கும் போதே மின்சார பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒயரிங் பணிக்கான அடிப்படை வழித்தடங்களை இறுதி செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு அறையிலும், மேல் தளத்தில் மின்சார விளக்குகள், மின்விசிறி ஆகியவற்றுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக, கம்பிகட்டும் பணிகள் முடிந்த நிலையில், ஒயரிங் குழாய்கள், ஜங்ஷன் பாக்ஸ்களை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் ஒயரிங் குழாய்கள் ஜங்க் ஷன்கள் கான்கிரீட் கொட்டப்படும் நிலையில் நகராமல் ஒரே இடத்தில் நிலையாக நிற்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.
இந்நிலையில், ஒயரிங் குழய்கள் மற்றும் ஜங்ஷன்களில் திறப்பு வழியை பயன்படுத்தி கான்கிரீட் கலவை உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, இதில் கான்கிரீட் கலவை புகுந்துவிட்டால், அடுத்த சில நாட்களில் அது இறுக்கம் அடைந்துவிட்டால் அதைஅப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இதில் மேல்தளத்துக்கான கம்பி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் ஒயரிங் குழாய்கள் எங்கு வர வேண்டும் என்பதை சரியாக கணக்கிட்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு அறையிலும் அடிப்படை தேவைக்கான குழாய்கள் மட்டும்இருந்தால் போதும் என்று நினைக்காமல், மாற்று என்ற அடிப்படையில் கூடுதல் குழாய்களை அமைப்பது நல்லது.
குறிப்பாக, மேல் தளத்தில் எந்தெந்த இடங்களில் இது போன்ற குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை வரைபடம் வாயிலாக குறித்து வைத்து கொள்வதும் அவசியம். இதில் குழாய் திறப்பு மற்றும் ஜங்க் ஷன் பாக்ஸ் திறப்பு பகுதிகளில் கான்கிரீட் கலவை புகாமல்தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக திறப்பு பகுதிகளில், தெர்மாக்கோல் போன்ற பொருட்களை அடைத்து வைப்பது வாடிக்கையாக காணப்படுகிறது. உண்மையில், பல இடங்களில், கம்பி கட்டும் வேலையின் போது, அதற்கு வரும் பணியாளர்களை பயன்படுத்தியே ஒயரிங் குழாய்கள் அமைப்பது வழக்கமான செயலாக காணப்படுகிறது.
இவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு இதில் கான்கிரீட் புகுந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெளிவு இருக்காது. இதனால், கான்கிரீட்போடும் பணிகள் முடிந்த நிலையில், ஒயரிங் குழாய்களை பயன்படுத்த முயற்சிக்கும் போது கான்கிரீட்டால் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவரும்.
இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க ஆரம்ப நிலையிலேயே ஒயரிங் குழாய்களுக்குள் கான்கிரீட் கலவை சென்றுவிடாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.