/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டுமான பணிக்கான சிமென்ட் பயன்பாட்டில் கவனம் தேவை!
/
கட்டுமான பணிக்கான சிமென்ட் பயன்பாட்டில் கவனம் தேவை!
கட்டுமான பணிக்கான சிமென்ட் பயன்பாட்டில் கவனம் தேவை!
கட்டுமான பணிக்கான சிமென்ட் பயன்பாட்டில் கவனம் தேவை!
ADDED : மே 18, 2025 07:10 AM
கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பொருட்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. வீட்டுக்கான கட்டுமான பணிகளை துவக்கும் போது, அதற்கு எந்தெந்த நிலையில் என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போதைய சூழலில், கட்டுமான பணிக்கு தேவையான கான்கிரீட் தயாரிப்பதில், சிமென்ட் தவிர்க்க முடியாத அடிப்படை ஆதார பொருளாக அமைந்துள்ளது. உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு எந்த வகை சிமென்ட் தேர்வு செய்வது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
கட்டுமான பணிக்கு என்ன வகை கான்கிரீட் தயாரிக்கப்போகிறோம் என்பதன் அடிப்படையில் அதற்கு பொருத்தமான சிமென்ட் வகையை தேர்வு செய்வது அவசியம். எந்த வகை என்பதுடன் எந்த நிறுவன தயாரிப்பு ஏற்றதாக இருக்கும் என்பதிலும் பொறியாளர்கள் ஆலோசனையை பெற்று முடிவு எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் வீடு கட்டும் பணிக்கு மேல் தளம் உள்ளிட்ட நிலைகளில் எம்20 வகை கான்கிரீட் தான் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை கான்கிரீட் தயாரிக்கும் போது, ஒரு பங்கு சிமென்ட், 1.5 பங்கு மணல் அல்லது எம் சாண்ட், 3 பங்கு ஜல்லி சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இத்துடன் கட்டு வேலை, பூச்சு வேலை நிலைகளில், ஒரு கன அடி சிமென்ட்டுக்கு, 4 கன அடி மணல் என்ற அளவில் சேர்த்து கலவை தயாரிக்க வேண்டும். இது பொதுவான வழிமுறைதான் என்றாலும், குறிப்பிட்ட சில இடங்களில் இந்த அளவு விகிதங்கள் வேறுபடுவதற்கு வாய்ப்பு உள்ளன.
கான்கிரீட் கலவை தயாரிப்பதில் சிமென்ட் என்ன செய்ய போகிறது என்பதை உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மணல், ஜல்லி, தண்ணீர் ஆகியவற்றை இணைக்கும் ஒரு ஒட்டு பசையாக மாறி சிமென்ட் செயல்படும் என்ற அடிப்படை விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் பசையாக இணைக்கும் பொருள் எந்த அளவுக்கு தரமான முறையில் செயல்பட வேண்டும் என்பதையும் அதன் தன்மை மாறாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இதில் மணல், ஜல்லி, தண்ணீர் ஆகிய பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தன்மை உண்டு.
இருப்பினும், வெவ்வேறு தனித்தன்மை கொண்ட பொருட்ளை ஒன்று சேர்த்து கட்டுமானத்தின் பாகங்களை உறுதியாக்குவதில் சிமென்ட் சரியாக செயல்பட வேண்டும். இதில், சிமென்ட் வாங்குவதிலும், இருப்பு வைப்பதிலும், உரிய அளவில் பயன்படுத்துவதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.