
நான் குட்டியம்மா; என் கணவர் ஆலிவர் டுவிஸ்ட்; எங்களுக்கு ரெண்டு பசங்க. தனித்திறமைகள் இல்லாத, சமூகத்துல எந்த மதிப்பும் இல்லாத ஆளா என் கணவரை என் பசங்க பார்த்தாங்க!
ஒருதடவை... சமூக வலைதளத்தை பயன்படுத்த தெரியாத என் கணவரால மூத்த மகனோட சினிமா பயணத்துல விரிசல். இதுக்காக சம்பந்தி குடும்பத்தினர் முன்னாடி அவரை கடுமையா அவன் திட்டினான். சில நாட்கள்தான்... செஞ்ச தப்பை காலம் அவனுக்கு உணர்த்துச்சு.
'என் பலவீனங்கள், குறைகள் வெளிய தெரியக்கூடாதுங்கிறதுல நான் கவனமா இருந்தேன். சமூகத்துல என்னை நல்லவனா வெளிக்காட்டிட்டு இருந்தேன். ஆனா அன்னைக்கு, என் கோபத்தால என் கீழ்மையான குணத்தை நீங்க வீடியோவுல பார்த்துட்டீங்க; அதுதான் நிஜம். நான் பலவீனமற்ற, குறைகளற்ற மனுஷன் கிடையாது!'ன்னு சமூக வலைதளம் வழியா எல்லாருக்கும் சொன்னான்.
இப்படி தன் தவறை ஒத்துக்கவும், தன் அப்பாவை அவன் மதிக்கவும் நான்தான் காரணம். என் கணவரை அவன் திட்டினப்போ, 'நீ ஒண்ணும் வானத்துல இருந்து குதிச்சு வந்துடலை. எந்த சூழல்லேயும் அவர் உன் அப்பாங்கிறதை மறந்துடாதே'ன்னு அவனை கண்டிச்சேன்.
சரியான இடத்துல, சரியான விதத்துல வெளிப்பட்ட என் கோபம் அவனுக்கு குற்றவுணர்ச்சியை தந்தது; அதுதான் தன் அப்பா கன்னத்துல அவனை முத்தம் தரவும் வைச்சது. சில நியாயமான கோபங்கள் பெரும் தவறுகளை திருத்தும்.
படம்: ஹோம் (மலையாளம்)

