sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்!

/

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!

நிழல் பேசும் நிஜம்!


PUBLISHED ON : ஏப் 23, 2023

Google News

PUBLISHED ON : ஏப் 23, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நான் சுஜாதா; என் மகன் வெங்கிக்கு தசைநார் சிதைவு நோய். 'இந்நோயா ளிகள், 17 வயதை தாண்டினது இல் லை'ன்னு மருத்துவர் சொல்லிட்டார்!

அடிக்கடி அவன் உடல்நிலை மோசமாகும்; இப்போ, 13வது தடவையா மருத்துவமனையில அவனை அனுமதிச்சிருக்கேன். படுக்கையில அவன்; பக்கத்துல நான்!

'அம்மா... என் நாட்களோட எண்ணிக்கை ரொம்ப கம்மி. ஆனாலும், நீ என் கடைசி ஆசைக்கு தடையா இருக்குறே; நீயும் மற்ற அம்மாக்கள் மாதிரிதானா?'

'ஆமா வெங்கி... நானும் எல்லா அம்மா மாதிரியும் சுயநலவாதிதான்!'

தன்னை கருணை கொலை பண்ணணும்; தன்னோட உடல் உறுப்புகளை தானம் கொடுக்கணும்; இதுதான் என் வெங்கியோட கடைசி ஆசை; இந்த ஆசைக்கு தடையா இருந்தது என் தாய்மை!

திடீர்னு ஒருநாள் அவனோட சுவாசம் குறைஞ்சது. அப்போ, 'உன் ஆசையை அம்மா நிறைவேற்றி தர்றேன்; திரும்பி வந்திருப்பா'ன்னு அழுதேன்; அவனோட சுவாசம் படிப்படியா சீராச்சு! 'ஆயுள் நீண்ட வாழ்க்கையை வாழ்றதை விட அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழணும்'னு அப்போதான் எனக்கு புரிஞ்சது!

வெங்கியோட விருப்பத்தை சட்டம் அனுமதிக்கலை; 24 வயசுல அவன் நிரந்தரமா உறங்கிட்டான்; பெரும் மனவலியோட சொல்றேன்... அவனோட கடைசி நாட்கள்... ரணம்! என் கேள்வி இதுதான்...

'கண்ணியத்தோட வாழ்றது உரிமைன்னா, கண்ணியமா மரணிக்க விரும்புறதும் உரிமைதானே?'

படம்: சலாம் வெங்கி (ஹிந்தி)






      Dinamalar
      Follow us