
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
தெருக்கள்ல மக்கள் நடமாடவே அச்சப்படுற அளவுக்கு இருக்குதுய்யா அரசு நிர்வாகம்; அய்யா... நான் சட்டம் ஒழுங்கு பற்றி பேசலை. மின்வாரிய சீரமைப்பு பணிக்காக தோண்டின பள்ளத்துக்கு வெளியே கிடந்த மின்வடம் வெடிச்சு கக்கின தீப்பொறியில, என் கால்கள் கருகின வேதனையைச் சொல்றேன்!
கடந்த மே 6ம் தேதி சாயங்காலம் 4:00 மணியளவுல, மேற்கு சைதாப்பேட்டை, அவ்வை தெருவுல நிகழ்ந்தது இந்த சம்பவம். ஆர்6 குமரன் நகர் காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்: 149/2024ல், 'மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமான செயல்பாடு'ன்னு, சட்டப்பிரிவு 337ன் கீழ் யாரையும் குற்றம் சாட்டாம மிகத்தெளிவா வழக்கு பதிவானதோட சரி!
தீக்காய சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரின்னு நான் அனுபவிச்ச வேதனை ரொம்ப கொடுமைய்யா! இப்போவரைக்கும் நான் முழுமையா மீளலை; நடக்குறதுக்கே ரொம்ப சிரமப்படுறேன்.
சொல்லுங்கய்யா... மின்வாரியத்தோட அஜாக்கிரதைதானே என்னோட இந்த நிலைமைக்கு காரணம்; இதுக்கு காரணமானவங்க மேல நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க; கள்ளச்சாராய மரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய் தர்ற நீங்க, நிவாரணம் கேட்ட என் மனுக்களுக்கு ஏன் எந்த மதிப்பும் தரலை; பதில் சொல்லுங்க!
- மின்வாரிய புதைவட கம்பி வெடித்ததால் கால்கள் கருகி நடக்க சிரமப்படும் 30 வயது மகாலட்சுமி, மேற்கு மாம்பலம், சென்னை.