
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'அடிக்கிற வெயில்ல, பின்னிருக்கையில பயணிக்கிற அடர் கூந்தல் பெண்களும் கட்டாயம் தலைகவசம் அணிந்திருக்கணும்னு அபராதம் போடுறதெல்லாம் நியாயமா சார்?
இதுக்கு மத்திய அரசோட உத்தரவை நீங்க கைகாட்டுறதா இருந்தா, என்னோட கேள்விகளுக்கு நீங்க பதில் தரணும்!
'கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டக்கூடாது' எனும் விதிக்கு உட்பட்ட வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் இயங்குகின்றன'ன்னு காவல் துறையால சொல்ல முடியுமா?
'தலைகவசம் கட்டாயம்; தமிழக மக்களின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது'ன்னு 'டாஸ்மாக்' வருமானம் சாட்சியா உங்களால குரல் எழுப்ப முடியுமா?
'ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் விபத்துகள் நிகழ்கின்றனவே தவிர, தமிழக சாலைகளின் தரத்தால் உயிரிழப்புக்கு வாய்ப்பில்லை'ன்னாவது சொல்ல முடியுமா?
இதெல்லாத்தையும் விட முக்கியமா...
'தமிழகத்தில் விற்கப்படும் தலைகவசங்கள் அனைத்தும் உயிர் காக்கும் அளவிற்கு தரமானவை'ன்னு உங்க அரசால உத்தரவாதம் தர முடியுமா?
'மக்களின் உயிர் காப்பதுதான் அரசின் முதன்மை நோக்கம்'னா எத்தனையோ இலவசங்கள் தர்ற மாதிரி தலைகவசத்தையும் இலவசமா தரலாமே; எதுக்காக, 'அபராதம்'ங்கிற தண்டனை?
- பின்னிருக்கை பயணங்களில், தலைகவசம் அணியாததற்காய் அடிக்கடி அபராதம் செலுத்தும் 'மகளிர் உரிமைத்தொகை' பெறும் பெண்களில் ஒருத்தி.