
'வஸந்த்... ஆர் யு இன் லவ் வித் மீ?'
'நான் என்னைக்காவது உன்கிட்டே அப்படி நடந்துக்கிட்டேனா ஹரிணி?'
'வஸந்த்... நான் உன்னை விசாரிக்க வரலை. உன் மனசை எனக்குத் தெரியும். அதை உறுதிப்படுத்திக்க மட்டும்தான் வந்தேன். இந்த நான்கு நாட்களா நீ பிரயத்தனப்பட்டு என்கிட்டே இருந்து விலகி ஓடினப்போ அது இன்னும் உறுதிஆயிருச்சு!
'ஒருத்தரை காதலிக்கிறது ஒரு சுகமான மன உணர்வு வஸந்த்; அதை நீ உனக்கான தோல்வியா நினைக்கிறே; உனக்குத் தெரியுமா... நம்மோட முயற்சியோ, முன்முடிவோ இல்லாம நமக்குள்ளே ஒரு கணநேரம் ஒரு நெஞ்சு கொள்ளாத ஒரு சந்தோஷம் வரும் பாரு... அதுக்குப் பேருதான் காதல். அதுக்கு முன்னும் பின்னும் அந்த நொடி வரவே வராது. அதுக்கு பிந்தைய தருணங்கள் எல்லாம் அந்த நொடிக்கு நாம செய்ற அலங்காரங்கள்!
'எனக்கு அந்த கணப்பொழுதை அடையாளம் தெரியும்; என் கண்ணுல நீ பார்த்து புரிஞ்சுக்கிட்ட அந்த காதல்; உனக்கு புரிஞ்சிருச்சுன்னு நான் உணர்ந்த அந்த நொடி; அந்த தருணத்தை நீயும் நானும் சேர்ந்து பார்த்தோம்!
'வஸந்த்... என்னைக்காவது உனக்கு சொல்லத் தோணுச்சுன்னா அன்னைக்கு சொல்லு... நான் கிளம்புறேன்!'
ஹரிணி கிளம்பிப் போகையில், 'அவள் கம்பீரமானவள்' என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‛யட்சன்' சிறுகதைஎழுதியவர்: வழக்கறிஞர் சுமதி
வெளியீடு: எழுத்து பிரசுரம்

