
குழந்தைகளின் மீது பேரன்பு கொண்ட நீ, அவர்களின் பேரன்பை பெறும் 'மினியேச்சர்' பொருட்களின் முகவரி பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா...
சென்னை, ராயப்பேட்டையில் இருக்கிறது இந்த ஹோம்டெகார்; இங்கு பித்தளை, அலுமினியம், இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், மரம், கல், ரெசின் 'மினியேச்சர்' பொருட்கள் குவிந்து கிடக்கின்றன! அஞ்சறை பெட்டி, தேநீர் கூஜா, ஈரடுக்கு டிபன் கேரியர், அலுமினிய பாய்லர், பித்தளை அடிபம்பு, அம்மிக்கல், திருகை உள்ளிட்ட குட்டி சமையலறை பொருட்களில் உன் இதயம் நிச்சயம் களவு போகும்!
ரூ.550 முதல் ரூ.5,000 வரையிலான பித்தளை மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 'கிச்சன் செட்' விற்பனைக்கு முன்... 'குழந்தைகளுக்கான இச்சமையல் பாத்திரங்கள், காய்கறி நறுக்கும் கத்தி, காற்றாடியின் இறக்கை இவற்றில் கூர்மை கிடையாது; இந்த குட்டி கிரைண்டரில் மின்சாரம் தாக்காது; குட்டி குக்கர், பிரட் டோஸ்டர், கடாய் கொண்டு இக்குட்டி அடுப்பில் குழந்தைகள் சமைக்கலாம் என்றாலும், பெற்றோர் கண்காணிப்பு முக்கியம்' எனும் அறிவுரை உனக்கு வழங்கப்படும்!
'அவ்வளவுதானா...' என்கிறாயா; இன்னும் சொன்னால், 'கிராமபோன், தராசு, சாரட் வண்டி, டெலஸ்கோப், பழமையான கார்...' என பட்டியல் நீளும்; உன் ஆசை எகிறிவிடும். ஆகையால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
காதலுடன், கண்ணம்மா.
99623 47681