sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 03, 2025 ,ஆவணி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்: சித்த மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

/

வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்: சித்த மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்: சித்த மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்: சித்த மருத்துவர் கு.சிவராமன் பேச்சு


PUBLISHED ON : ஜூலை 06, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நலம் குறித்த யூகங்கள் மற்றும் அதன் உண்மைகள் குறித்து விளக்கமளிக்கும், 'நலந்தானா, நம் கையில்' என்ற நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

சென்னை ஆரோக்யா சித்த மருத்துவமனை மூத்த மருத்துவர் கு.சிவராமன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

மருத்துவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் யூகத்தின் அடிப்படையில் அதிகமான கருத்துக்கள் பரவுகிறது. சமூக ஊடகத்தில் தகவல் தேடுவது தவறல்ல; ஆனால் அதில் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையானதா, சரியானதா என்று பார்க்க வேண்டும். அறிவு என்பது வேறு, தகவல் என்பது வேறு. மருத்துவம் தொடர்பான தவறான தகவல்கள் வேகமாக பரவுவதால் சிக்கலை ஏற்படுத்துகிறது. கொரோனா தடுப்பூசி பற்றி சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்த செலவில் மருந்து சுண்டுபிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவறான தகவலை பரப்பினர். ஆனால், நீதிமன்றம் அனுமதி அளித்ததால், குறைந்த செலவில் புற்றுநோய் மருந்து கிடைக்கிறது. அரசியல் ரீதியாக தவறான தகவல் பரப்பினால் கடந்து போய்விடலாம். ஆனால் மருத்துவம் தொடர்பாக தகவல்கள் அப்படியல்ல, அவற்றை நம்புவதால் தவறுகள் நடக்கிறது. மருத்துவ துறை சார்ந்து சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் அதிக பிழைகள் மண்டிகிடக்கிறது.

ஒருவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு எந்த மருந்து தேவை என்பதை மருத்துவர்கள் தான் கூற வேண்டும். தற்போது, கூகுள் மருத்துவர்கள் அதிகரித்து விட்டனர். மருத்துவ துறை பற்றி கூகுளில் தேடும் எல்லாதகவலையும் நம்பாதீர்கள்.

இவ்வாறு மருத்துவர் சிவராமன் பேசினார். அதை தொடர்ந்து, நீரிழிவு நோய் நம்பிக்கையும், நிஜங்களும் என்ற தலைப்பில், சென்னை செந்தூர் நீரிழிவு சிகிச்சை மருத்துவமனை டாக்டர் சண்முகம், பெண் ஆரோக்கியம் குறித்து சென்னை மித்ராஸ் பவுண்டேசன் டாக்டர் அமுதாஹரி, திருப்பூர், வாழ்வியல் நோய் சிகிச்சையில் ஆயுர்வேதம் என்ற தலைப்பில், முத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சுடர்கொடி ஆகியோர் பேசினர்.






      Dinamalar
      Follow us