PUBLISHED ON : ஜூலை 06, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவசர உலகில், கையில் கிடைத்ததை அவசரமாக உள்ளே தள்ளிக்கொண்டு, செல்வதே நோய்கள், முன்னறிவிப்பு இன்றி வரக்காரணம்.
'நீங்கள் உங்கள் உடலை பாதுகாப்பது எப்படி?' என, கோவை அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் வீரமணியிடம் கேட்டோம்.
''மகிழ்ச்சி என்பது, நம் மனம் தான். கடந்த காலம் குறித்து வருந்துவதோ, வேதனை ப்படுவதோ கூடாது. நடந்ததை திரும்ப நினைப்பதால் பயனில்லை. அடுத்தது என்ன செய்வது என்றுதான் பார்க்க வேண்டும். நம்மை எப்போதும் ஏதாவது ஒன்றில், ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடைகளுக்கு நடந்து செல்வதே, மிகப்பெரிய உடற்பயிற்சி. அதைத்தாண்டி தினமும் காலை, மாலை நடைபயிற்சி அவசியம் தேவை. வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிக்கலாம். இது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது,''.