தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தையின் தாகத்தை தணிக்கும் முதல் பால்!

குழந்தையின் தாகத்தை தணிக்கும் முதல் பால்!

குழந்தையின் தாகத்தை தணிக்கும் முதல் பால்!


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, 41 சதவீதம் பச்சிளங் குழந்தைகளுக்கு மட்டுமே, பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் தாய்ப்பால் கிடைக்கிறது. 64 சதவீதம் குழந்தைகள் மட்டுமே, 6 மாதங்கள் வரை முழுமையாக தாய்ப்பால் குடிக்கின்றனர்.



முதல் பால்


தாய்ப்பாலில் முதலில் கொடுக்கும்போது, முதலில் வெளிவரும் பாலை, முதல் பால் அல்லது சீம்பால் என்றும், இறுதியில் சுரப்பது பின்பால் எனவும் சொல்வர்.

முன்பாலில் அதிகளவு நீர், புரதம், லாக்டோஸ், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. முன்பாலில் அதிகளவு நீர் உள்ளதால், குழந்தையின் தாகத்தை தணிக்கும். பின்பாலில், கொழுப்பு இருப்பதால், சக்தி, பசியாறிய நிறைவை தரும். எனவே, ஒரு மார்பகத்திலுள்ள தாய்ப்பால் முழுமையாகக் கொடுத்து முடித்த பிறகு தான், அடுத்த மார்பகத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

அழுத குழந்தை பால் குடிக்கும்

குழந்தை அழுத பிறகு மட்டுமே தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்பதில்லை. குழந்தை பசியிலிருப்பதை சில சமிக்ஞைகள் மூலம் அறியலாம். வாயை அகலமாகத் திறக்கும், தலையை ஒரு பக்கமாகத் திருப்பி தாயின் மார்பகத்தைத் தேடும்; பசி அதிகமானால், கைகளை விரிக்கும்; உடல் அசைவுகளை அதிகரிக்கும்; கையை, வாயை நோக்கிக் கொண்டு செல்லும்; இறுதியாகத் தான் அழ ஆரம்பிக்கும். குழந்தை பசியிலிருப்பதை ஆரம்ப சமிக்ஞைகளிலே அறி ந்து கொண்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்த சமிக்ஞைகள் எதுவும் இல்லையென்றாலும் கண்டிப்பாக 2 -- -3 மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தையை எழுப்பி, தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; ஒரு நாளைக்கு 8 - -12 முறை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாயின் உணர்வுகள்

தாய்ப்பால் சுரப்பிற்கு புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தாயின் உணர்வுகள், ஆக்ஸிடோசின் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்பதால், கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்ற எதிர்மறை உணர்வுகளால், பால் சுரப்பது குறையலாம்.

புரோலாக்டின் ஹார்மோன் இரவு நேரத்தில் அதிகம் சுரக்கும். இரவு நேரத்தில் தாய்ப்பால் தருவது அவசியம்.

சர்க்கரைத் தண்ணீர், கிரைப் வாட்டர், தேன் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பிறந்த குழந்தைக்கு தரக் கூடாது.

பால் பவுடர்

இரண்டு வருடங்கள் வரையாவது தாய்ப்பாலை தொடர வேண்டும். பசும்பால் புரத ஒவ்வாமை ஏற்படுத்தலாம். எனவே, ஒரு வயது வரை குழந்தைக்கு பசும்பால் தரக் கூ டா து.

மருத்துவர் அறிவுறுத்தல் இருந்தால் மட்டுமே பவுடர் பால் தர வேண்டும்.

உணவுகள்

வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு, கீரை வகைகள், சீரகம், ஓட்ஸ், எள், கேரட், துளசி, பச்சை பப்பாளி, கறிவேப்பிலை, பாகற்காய், கொண்டைக்கடலை, தர்பூசணி, பால், சால்மன் மீன், பார்லி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாதாம், முருங்கைக்கீரை, பருப்பு வகைகள் மற்றும் பீட்ரூட் முதலியவை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்பதால், இவற்றை தாய்மார்கள் தங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வேலைக்கு செல்லும் தாய்மார்கள், பிரெஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பாலை சேகரித்து வைத்துவிட்டு செல்லலாம்.

குளிர்சாதனப் பெட்டியில் 4 நாட்கள் வரையும், வெளியே இருந்தால் 4 மணி நேரம் வரையும் சேகரித்த தாய்ப்பாலை பயன்படுத்தலாம். இதனை பால்புட்டியில் கொடுக்காமல், பாலாடையில் கொ டு க்கலாம்.

டாக்டர் மு.ஜெயராஜ்,

குழந்தை நல மருத்துவர்,

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,காரைக்கால், புதுச்சேரி. 8778533123jeyaraj.jeeva@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us