PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM
![]() |
நாளை சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவிற்கான ஒத்திகை கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்றது.
இதில் மிடுக்குடன் அணிவகுப்பினர் நடந்துவரும் போது அவர்களுக்கு முன்னால் ஒரு நாயும் அவர்களைப் போலவே நடந்து வந்தது, அதை விரட்டுவதற்குள் பாதுகாப்பு போலீசாருக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
![]() |
கவர்னர்,முதல்வர் போல 'டம்மியாக' விழாவில் கலந்து கொண்டவர்கள், மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்த போதும் கடைசி வரை பேசிக்கொள்ளாமல் முகத்தை திருப்பியே வைத்துக் கொண்டனர்.
![]() |
அலங்கார அணிவகுப்பு வாகனங்கள் எதுவும் தயராகவில்லை என்பதால் அதிகாரிகளின் கார்களே அலங்கார வாகனங்கள் என்ற அறிவிப்போடு அணிவகுப்பில் வலம் வந்தன.
காலை 8 மணி நிகழ்சிக்கு பள்ளி,கல்லுாரியில் இருந்து வந்த மாணவர்கள் அதிகாலையிலேயே அழைத்துவரப்பட்டனர் போலும் துாக்க கலக்கத்திலேயே இருந்தனர்.
ஒடிசா,மணிப்பூர்,கர்நாடகா மாநில கலைஞர்களின் நடன நிகழ்வும் இடம் பெற்றிருந்தது,அவர்கள் தமிழ்ப்பாடலுக்கு நடனமாடி பயிற்சி பெறாதததால் அவர்கள் இசைக்கு ஏற்பவே நடனமாடச் செய்தனர்.
தேசப்பற்றை அதிகரிக்கச் செய்யும் குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட பொதுமக்கள் திரளாக வர வேண்டும் ஆனால் சென்னையில் சமீப வருடங்களாக பொதுமக்கள் அதிகம் வருவதில்லை காரணம் போலீசாரின் கெடுபிடிகளே.கெடுபிடிகளை தளர்த்தி மக்கள் அதிகம் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்
-எல்.முருகராஜ்.




