/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
மெல்பேர்னில் கர்நாடக இசைக் கச்சேரி செய்த இளம் பாடகன்
/
மெல்பேர்னில் கர்நாடக இசைக் கச்சேரி செய்த இளம் பாடகன்
மெல்பேர்னில் கர்நாடக இசைக் கச்சேரி செய்த இளம் பாடகன்
மெல்பேர்னில் கர்நாடக இசைக் கச்சேரி செய்த இளம் பாடகன்
ஜூலை 04, 2025

ஆஸ்திரேலியா- மெல்பர்னில் வர்ஷா இசைக்கல்லூரியின் கர்நாடக இசைக் குறுங்கச்சேரி விக்டோரியா சான்ட்லெர் சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில், வர்ஷா இசைக்கல்லூரியின் மாணவனான நிஷித் ராஜன்பாபுவின் கர்நாடக இசை குறுங்கச்சேரி ஒரு மாலைப்பொழுதை ரம்மியமாக்கி இருந்தது. நான்காவது வயதில் இருந்து பத்து வருடங்களாக கர்நாடக சங்கீதம் பயின்று வரும் நிஷித் ராஜன்பாபு பல மேடைகளில் பாடியிருக்கிறார். பல இசைப்போட்டிகளிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடி வெற்றியும் பாராட்டுதல்களையும் வெகுவாகப் பெற்றுள்ளார். இவர், இலங்கையைச் சேர்ந்த ஆனந்தசிவம் ராஜன்பாபு அலங்ருதா தம்பதியின் புதல்வர்.
நிஷித் ராஜன்பாபுவுக்கு பக்க வாத்தியமாக சதீபன் இளங்குமரன் மிருதங்கம், நர்த்தனா கனகசபை வயலின், அனிருத் சிவராம கிருஷ்ணமூர்த்தி கடம், ஹரினி சுரேஸ்காந் தம்புரா வாசித்தனர். அத்தோடு,வரநதி ராமராகவன், நிக்ஷிந்த் ராஜன்பாபு, சற்சனன் வியாசன் ஆகியோர் இணைந்து வரவேற்புரை நிகழ்த்தினர்.
நிஷித் என்ற இளம் பாடகன் எதிர்காலத்தில் வெகுவாகப் பிரகாசிப்பாரென்று வாழ்த்துகின்றேன் என்று தொகுப்பாளர் சத்தியா நிரஞ்சன் சுட்டிக்காட்டினார்.
Advertisement