/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்காவில் தமிழ்நாட்டுப் பெட்டிக்கடை
/
அமெரிக்காவில் தமிழ்நாட்டுப் பெட்டிக்கடை
ஜன 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவில் தமிழக பாரம்பரிய நொறுக்குத் தீனியை விற்பனை செய்யும் பெட்டிக் கடையை தமிழர் ஒருவர் நடத்தி வருகிறார். அமெரிக்காவின் ஜார்ஜியா மகாணத்தில் உள்ளது கம்மிங் என்ற நகரம். இங்கு ஒரு தமிழர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
அ.சொ.பழ. பெட்டிக்கடை என்ற பெயரிலான இந்த கடையில் தமிழ்நாட்டு நொறுக்குத் தீனிகளான கடலை மிட்டாய், தேன் மிட்டாய், கமர்கட்டு, மசாலா பொரி, வத்தல், பட்டர் பிஸ்கட்,ரஸ்க் ஆகியவை விற்கப்படுகின்றன. இது போக டீயும் மசால் வடையும் இங்கு கிடைக்கும்.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற பலகையுடன் காட்சி தரும் இந்த பெட்டிக்கடையில், பெட்டிக்கடைக்கே உரிய முக்கிய அடையாளமான தமிழ் நாளிதழ்களின் போஸ்டர்கள் தொங்க விடப்பட்டுள்ளன.