/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் முதலிடம் பெற்ற பக்ரைன் மாணவர்
/
துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் முதலிடம் பெற்ற பக்ரைன் மாணவர்
துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் முதலிடம் பெற்ற பக்ரைன் மாணவர்
துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் முதலிடம் பெற்ற பக்ரைன் மாணவர்
மார் 27, 2024

துபாய் : துபாயில் நடந்த 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் முதலிடம் பெற்ற பக்ரைன் மாணவர் முகம்மது அல் அம்ரிக்கு துபாய் விளையாட்டு கவுன்சிலின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது ஷேக்கா ஹிந்த் பிந்த் மக்தூம்-க்கு வழங்கப்பட்டது.
துபாய் அல் மம்சார் கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்கத்தில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி மார்ச் 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பக்ரைன் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். திருக்குர்ஆனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டி அமைந்திருந்தது. இந்த போட்டியில் நடுவர்களாக அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
இந்த போட்டியில் முதல் பரிசை பக்ரைன் நாட்டைச் சேர்ந்த மாணவர் முகம்மது அல் அம்ரிக்கு துபாய் விளையாட்டு கவுன்சிலின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பரிசு வழங்கி கவுரவித்தார். இரண்டாவது பரிசு லிபியா நாட்டைச் சேர்ந்த நாஜி பின் சுலைமானுக்கும், மூன்றாவது பரிசு காம்பியா நாட்டைச் சேர்ந்த ஷேக் திஜான் அம்பிக்கும் வழங்கப்பட்டது. மேலும் நான்கு முதல் பத்து இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்கேற்றவர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர். அவர்களுக்கு அந்த நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்-ன் மனைவி ஷேக்கா ஹிந்த் பிந்த் மக்தூம்-க்கு இஸ்லாமிய, மனிதாபிமான, சமூகப் பணிகளுக்காக வழங்கப்பட்டது. இந்த விருதை அவரின் சார்பில் ஷேக் சயீத் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பெற்றுக் கொண்டார். மேலும் இந்த போட்டிக்கான நடுவர்களாக கலந்து கொண்டவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
-நமது செய்தியாளர் காஹிலா
Advertisement