/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார்
/
குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார்
குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார்
குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார்
மார் 27, 2024

குவைத் : குவைத் இஸ்லாமிய விவகாரத்துறை ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சங்க தலைவர் முஹம்மது ஒமர் பலாஹி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் சரபுதின் சூஃபி, சிஃபாத் ஆலம் ஆகியோர் நல்லிணக்கம் குறித்தும், மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கை குறித்தும் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் இந்திய டாக்டர்கள் பேரவையின் தலைவர் டாக்டர் திவாகர சாலுவையா, தெலுங்கு கலா சமிதி தலைவர் பொத்துரு பார்த்தசாரதி, குவைத் ஒடிசா சங்க தலைவர் உமேஷ் பாண்டா, குவைத் சாரதி அமைப்பின் தலைவர் கே.ஆர். அஜி, ஜாமிஆ அல் இஸ்லா அமைப்பின் நிர்வாகிகள் அப்துல்லா அல் ஹுதைப், இமாத் அல் சினன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
அவர்கள் அனைவரும் சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பத்து பேருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இஸ்லாம் குறித்த நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement