/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பேராசிரியர் பிரிவில் அமீரக அரசின் 10 ஆண்டு கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்
/
பேராசிரியர் பிரிவில் அமீரக அரசின் 10 ஆண்டு கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்
பேராசிரியர் பிரிவில் அமீரக அரசின் 10 ஆண்டு கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்
பேராசிரியர் பிரிவில் அமீரக அரசின் 10 ஆண்டு கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்
மார் 27, 2024

துபாய் : அமீரகத்தில் பேராசிரியர் பிரிவின் கீழ் அமீரக அரசின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் பெறுகிறார்.
அஜ்மான் அன்வர் பிசினஸ் மேன் சர்வீசஸ்-இன் தலைமை அலுவலகத்தில், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வனுக்கு அன்வர் குழுமங்களின் வர்த்தக ஒருங்கிணைப்பாளர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கவுரவித்ததார்.
இந்த நிகழ்ச்சியில் அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன், பி.எம்.குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கனகராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன் மூலம் பேராசிரியர் பிரிவின் கீழ் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை டாக்டர் சித்திரை பொன்செல்வன் பெறுகிறார். பத்து வருட நிரந்தர கோல்டன் விசா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திறமையான நிபுணர்களுக்கு அந்தந்த துறைகளில் அவர்களின் பங்களிப்புக்காக அமீரக அரசால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அஜ்மான் அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் கூறியதாவது : துபாய் நகரம் உலக மக்களின் கனவு நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த நகரம் உலகின் மிகவும் பாதுகாப்பான நகரமாகவும், வேலை செய்வதற்கு ஏற்ற நகரமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக இந்த நகரில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க நகரின் கல்வி நகரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் உள்ள முக்கிய பல்கலைக்கழகமாக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கர்டின் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனர் மற்றும் ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் தலைவராக பணியாற்றி வருகிறார் பேராசிரியர் டாக்டர். எம். சித்திரை பொன் செல்வன்.
ஆரம்பக் கல்வி
பேராசிரியர் டாக்டர். M. சித்திரை பொன் செல்வன் தனது ஆரம்பக் கல்வியை தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளையில் அமைந்துள்ள அருள்நெறி பள்ளிக்கூடத்தில் பயின்றார். இவர் தமிழ் மொழி வழி பள்ளிகளில் படித்தது மட்டுமல்லாமல், துபாயில் தனது குழந்தைகளையும் அவர்களின் இரண்டாம் மொழி பாடத்திற்கு தமிழ் மொழியை தேர்வு செய்து படிக்கச் செய்து வருகிறார்.
தமிழ்
தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தாய்மொழியை தவிர்த்து ஆங்கில மோகம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தின் காரணமாக தனது பிள்ளைகளையும் படிக்கச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் பொன் செல்வன், உற்பத்தி பொறியியலில் இளங்கலை, கணினி உதவி வடிவமைப்பில் முதுநிலை, மற்றும் உற்பத்தி பொறியியல் பிரிவில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார்.
மேலும் அப்ரசிவ் Abrasive வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தில் அவரது ஆராய்ச்சிக்காக, சமீபத்தில் (கடந்த பிப்ரவரி 2020 இல்) லிங்கன் யுனிவர்சிட்டி, மலேசியாவிலிருந்து முதுகலை டாக்டர் பட்டத்தை பெற்றார். மற்றும் UK உயர் கல்வி அகாடமியின் (SFHEA) மூத்த பெல்லோஷிப்பும் பெற்றுள்ளார். இவர் அப்ரசிவ் Abrasive வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தில் உலகின் நன்கு அறியப்பட்ட ஆராய்ச்சியாளர் ஆவார்.
கர்டின் பல்கலைக்கழகம், துபாய் ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகத்தின் ஒரு கிளை வளாகமாகும், இது உலகின் முதல் தரவரிசை பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கர்டின் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், இலங்கை மற்றும் துபாய் ஆகிய இடங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. இவ்வளவு உயர்ந்த பதவியை, கர்டின் பல்கலைக்கழகத்தில் வகிக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரே நபர் இவர் ஆவார்.
நாசா
அவரது வழிகாட்டுதலின் கீழ் ஒரு குழு மாணவர்கள் சந்திரனின் லுனார் மேற்பரப்பிற்கு நாசாவுடன் இணைந்து ஒரு சிறிய அளவிலான செயற்கைக்கோளை அனுப்ப இருக்கின்றனர். இது ஒரு தமிழருக்கு கிடைத்த பெருமையாகும். பேராசிரியர் பொன் செல்வன், பல்வேறு ஆராய்ச்சி பத்திரிகைகளில், 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து வழங்கியுள்ளார். இங்கிலாந்து, ஜெர்மனி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் முக்கிய பேச்சாளர் (keynote speaker), அமர்வுத் தலைவர் (session chair|), வள நபர்(resource person) மற்றும் தொழில்நுட்பக் குழு உறுப்பினர் (technical committee member) என அழைக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டுள்ளார்.
மலேசியா
கடந்த 2019 ஆம் ஆண்டில், யுனிவர்சிடி புத்ரா மலேசியாவில் அவர் ஆற்றிய முக்கிய உரையின் போது உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். மேலும் தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வது குறித்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு இவர் அழைக்கப்பட்டு சிறப்பு பேச்சுக்களை வழங்கியுள்ளார்.
விருதுகள்
பேராசிரியர் பொன் செல்வன் பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் சில
முக்கியமான விருதுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
• துபாயின் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் “சிறந்த பேராசிரியர் விருது (2014)”
• துபாய் அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ), “நிலையான
போக்குவரத்துக்கான - துபாய் விருது (2017)”.
• ஐக்கிய அரபு எமிரேட்ஸில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் லவ்வர்ஸ் பவுண்டேஷனின்
“சர்வதேச கல்வியில் சேவைக்கான விருது (2017)”
• துபாய் அரசாங்கத்தின் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA) “சிறப்பு பாதுகாப்பு
திட்ட விருது (2018)”.
• அலீம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஷார்ஜாவின் “அலீம் நிலைத்தன்மை
ஆராய்ச்சியாளர் விருது (2018)”
• துபாயில் நடைபெற்ற, பயன்பாட்டு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
குறித்த 12 வது உலக மாநாட்டில் “சிறந்த ஆராய்ச்சி கட்டுரை விருது (2018)”.
• திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நானோ தொழில்நுட்பம் மற்றும் இயந்திர பொறியியலில்
முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச காங்கிரஸ்- இல் “சிறந்த ஆராய்ச்சி கட்டுரை விருது (2016)”.
• துபாய் அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ), “நிலைத்தன்மை தூதர்
விருது (2019)”
• ஆசிய கல்வி தலைமைத்துவ விருது வழங்கும் விழாவில் “பொறியியல் படிப்புகளில் சிறந்த
பேராசிரியர் விருது (2019)”
• லண்டனில் நடைபெற்ற, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப போக்குகள் குறித்த 2வது
சர்வதேச மாநாட்டில் “சிறந்த ஆராய்ச்சி கட்டுரை விருது (2014)”.
• தாய்லாந்தில் நடைபெற்ற, இயந்திர மற்றும் தொழில்துறை பொறியியல் போக்குகள்
குறித்த சர்வதேச மாநாட்டில் “சிறந்த ஆராய்ச்சி கட்டுரை விருது (2011)”.
• ரோமில் (இத்தாலி) நடைபெற்ற, மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்ஸ் மற்றும் உற்பத்தி
பொறியியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் “மாநாட்டு அமர்வுத் தலைவர் விருது (2015)”.
• இந்தியாவின் சி.டி. பல்கலைக்கழகத்தில் “சிறந்த கல்வியாளர் விருது (2019)”.
• துபாயின் கர்டின் பல்கலைக்கழகத்தில் “சிறந்த ஆராய்ச்சியாளர் விருது (2020)”
• “TAG நிறுவனர் விருது - ஆண்டின் சிறந்த கல்வியாளர் (2021)” நாடுகடந்த கல்விக் குழுவில் (TAG), துபாய்.
• ஆஸ்திரேலியாவில் “கர்டின் குளோபல் விருது (2022)” கர்டின் குளோபல், கர்டின் பல்கலைக்கழகம்
• “Ezhumin விருது (2023)” by News 7 Tamil TV Channel
மேலும் இவர் பிஎச்டி மாணவர்களுக்கு வழிகாட்ட ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட மேற்பார்வையாளராக உள்ளார். தற்போது இவரது மேற்பார்வையின் கீழ் 6 பி.எச்.டி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் துபாய் எக்ஸ்போ நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் காப்-28 உலக பருவநிலை உச்சிமாநாடு நடந்தது. அந்த மாநாட்டிலும் சிறப்பான பங்கினை வழங்கினார். இவரது மாணவர்களும் மாநாட்டை பார்வையிட்டு சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.
இதன் தொடர்ச்சியாக துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை தொடர்பான சிறப்பு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மந்திரியும் பங்கேற்றார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர் கலசங்கம் பல்கலைக்கழகம், கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் பேராசியர்கள் உள்ளிட்ட தமிழக கல்வியாளர்கள் பங்கேற்று தங்களது ஆய்வுரைகளை வழங்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்ததும் சிறப்பானது.
தமிழ் மொழிக் கல்வியில் படித்து துபாயில் சர்வதேச பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பை வகிக்கும் டாக்டர் சித்திரை பொன் செல்வனுக்கு அமீரக அரசு பேராசிரியர் பிரிவின் கீழ் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இதன் மூலம் இந்த பிரிவின் கீழ் கோல்டன் விசா பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பெறுகிறார் என்றார். கோல்டன் விசா பெற்ற பேராசிரியர் சித்திரை பொன் செல்வனுக்கு பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement